கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

Jul 30, 2026,11:09 AM IST

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சி பதிவு : 

தனது ஓய்வு குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஜிங்க்யா ரஹானே , "இத்தனை ஆண்டுகளாக எனக்கு அளப்பரிய அன்பையும் ஆதரவையும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சொல்ல என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணிக்காக 'கேப் எண் 278' அணிந்து களம் கண்ட ரஹானே, தனது இந்த அறிவிப்பின் மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் அளவிலான அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார்.


மறக்க முடியாத கேப்டன்ஷிப்: 




ரஹானேவின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியாகும். இந்திய அணி பல முக்கிய வீரர்களைக் காயத்தால் இழந்து தடுமாறிய சூழலில், ரஹானேவின் நிதானமான மற்றும் சிறப்பான கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்து தொடரைக் கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவரது தலைமைப் பண்பு என்றென்றும் நினைவுகூரத்தக்க ஒன்றாக மாறியது.


2007–08 ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக அறிமுகமான ரஹானே, தனது இரண்டாவது சீசனிலேயே 1,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். 2023–24 ரஞ்சி சீசனில் மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்டு அணிக்குக் கோப்பையையும் பெற்றுத் தந்தார்.வெளிநாட்டு மண்ணில் (லார்ட்ஸ், மெல்போர்ன், வெலிங்டன் போன்ற மைதானங்களில்) சவாலான ஆடுகளங்களில் சதம் அடித்து இந்திய அணியை பலமுறை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியவர்.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 5,300-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.


அமைதியான மற்றும் நிதானமான ஆட்டம்

இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவராக விளங்கிய ரஹானே, இக்கட்டான சூழ்நிலைகளில் களமிறங்கி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதில் வல்லவர். களத்தில் தனது நிதானமான நடத்தையாலும், நேர்த்தியான பேட்டிங் திறமையாலும் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். நீண்ட காலமாக இந்திய அணிக்கு வழங்கிய பங்களிப்பிற்கு விளையாட்டு உலகைச் சார்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களின் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நினைவு ஒரு இனிமை!

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்