சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார். இவர் கடந்த மாதம் 28ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்போது இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்தின் பிறப்பு உறுப்பு, வாய், காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது. இந்த அரசு வழக்கை உணர்வு பூர்வமாக எடுத்து நியாயமான விசாரணையை சிபிசிஐடியின் சிறப்புக்குழுவாள் நடத்த வேண்டும்.

சட்ட விரோத மரணத்திற்கு காரணமான உயர் அதிகாரி உள்ளிட்ட அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கூறியுள்ளது. வரும் காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறை இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்குமார் மரணத்திற்கு காரணமானவர்களாக கூறப்பட்ட 6 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அஜித்குமார் மரண வழக்கில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவர் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக சென்னை தலைமையகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}