சென்னை: 2026-27 நிதியாண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் (இடைக்கால பட்ஜெட்) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து 2026-27 நிதியாண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் (இடைக்கால பட்ஜெட்) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவது ஆகியவற்றை மையமாக வைத்து இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கூடுதல் கிராம ஊராட்சிகளை இணைக்க நிதி ஒதுக்கீடு.
ரசாயன உரங்களைக் குறைத்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கத் தனித் திட்டம் மற்றும் அதற்கான மானியங்கள் அறிவிப்பு.
சிறு மற்றும் குறு விவசாயிகள் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தும் வகையில், மானிய விலையில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் மாநிலத்தின் மொத்த வேளாண் சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லாப் பயிர்க்கடன் மற்றும் இதர விவசாயக் கடன்களுக்கான இலக்கு இந்த ஆண்டும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்க இத்திட்டம் வலுப்படுத்தப்படும்.
விளைபொருட்களைச் சேமிக்கவும், அவற்றைப் பதப்படுத்தி கூடுதல் விலைக்கு விற்கவும் தமிழகம் முழுவதும் 100 புதிய மதிப்புக்கூட்டு மையங்கள் (Value Addition Centres) அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள முக்கிய உழவர் சந்தைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆன்லைன் வர்த்தகத்துடன் அவற்றை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறை மூலம் சுமார் 500 நீர் சேகரிப்பு அமைப்புகளைத் தூர்வாரவும், 100 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 70% வரை மானியத்தில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் 'தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்' (Millets Mission) தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மாநில மரமான பனை மரங்களைப் பாதுகாக்கவும், பனை சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் பயிர் செய்து 7 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
58,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வேளாண் கல்வி, கல்லூரிகளுக்கு ரூ.3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர் சேதங்களுக்கு ரூ.20,000 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர்சேத நிவாரணத்தால் 23.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
முந்திரி உற்பத்தியை 8,400 ஹெக்டேருக்கு அதிகரிக்க ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
Kalaiyarasi Muthuvel Poems: பார்வை.. யாருக்குள் யார்.. சாபம்..!
சிந்தனைச் சிதறல்.. நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது!
மூங்கில் போல் வளைந்திடு..!
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ரதி ...நேரா மதன்கிட்டே கேட்டு விடு.. அவளின் (ல்) அவன்! (17)
அழகி .. ஒரு நிமிடக் கதை (11)
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
{{comments.comment}}