சென்னை : போட்டோகிராபி, சமையல் என ஷூட்டிங் போன இடத்திலும், கிடைக்கிற நேரத்தில் எல்லாம் தனது திறமையை காட்டி விடாமுயற்சி பட டீமை ஆச்சரியப்படுத்தி, அசர வைத்து வருகிறார் அஜித். இந்த போட்டோக்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
டைரக்டர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா காசன்டிரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்கி அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் பங்கேற்பதும், அவ்வப்போது சென்னை திரும்புவதுமான அஜித்தின் வீடியோக்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவிலும், மீடியாக்களிலும் வெளியாகி வருகிறது.

அஜித், கார் மற்றும் பைக் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மட்டுமல்ல அவருக்கு போட்டோகிராபி, சமையல் ஆகியவற்றிலும் அதிக ஆர்வம் உண்டு. சமீப ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதலில் பயிற்சி எடுத்து, பல பதக்கங்களை குவித்தும் சாதித்து வருகிறார்.
இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, கிடைத்த கேப்பில் உடன் நடிக்கும் ரெஜினா, அர்ஜூன், டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட பலரை விதவிதமான ஆங்கில்களில் வித்தியாசமாக போட்டோ எடுத்துக் காட்டி அசத்தி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போட்டோகிராபி பயிற்சியும் அஜித் எடுத்துக் கொண்டார்.
அஜித் விதவிதமாக கிளிக்கிய போட்டோக்களை அவரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவும், அந்தந்த நடிகர்களும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை அஜித் இப்படி அசத்தலாக போட்டோ எடுப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் வீரம் படத்தில் நடித்த போது அப்புக்குட்டியையும், வேதாளம் படத்தில் நடித்த போது ஸ்ருதிஹாசனையும் இப்படி போட்டோ எடுத்து காட்டி உள்ளார்.

நேற்று போட்டோ எடுத்து அனைவரையும் அசத்திய அஜித், இன்று விடாமுயற்சி ஷூட்டிங் இடைவெளியின் போது கிச்சனுக்கு சென்று சூப்பராக சமைத்து போட்டு அசத்தி உள்ளார். இந்த போட்டோக்களும் தற்போது வேகமாக பரவி வருகிறது.
எப்போதும் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிச்சனுக்கு சென்று படக்குழுவினருக்கு தனது கைகளால் ருசியாக நம்ம ஊர் சாப்பாட்டை சமைத்து கொடுப்பது அஜித் வழக்கம். இதற்கு முன்பும் பல பட ஷூட்டிங்கின் போது இவ்வாறு செய்து அசத்தி உள்ளார். பிரியாணி, சிக்கன் வகைகளை சமைப்பதில் அஜித் வல்லவராம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}