டெல்லி: நடிகர் அஜீத் குமார் தனது ரேசிங் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஷூ லேஸை கட்டி விட்ட வீடியோ வெளியாகி அவரது ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
அஜீத் குமார் எது செய்தாலும் தற்போது செய்தியாகிறது, பேசப்படுகிறது, வைரலாக்கப்படுகிறது. அவரது நடிப்பில் வெளியான விடாமுயற்சி தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ரேஸுக்காக போர்ச்சுகல் போயுள்ளார் அஜீத். அங்கு அவர் செய்த செயல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தனது ரேசிங் டீமைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஷுூ லேசை கீழே அமர்ந்து கட்டி விட்டு ஹெல்ப் செய்துள்ளார் அஜீத். எந்த ஈகோவும் பார்க்காமல் அவர் செய்த இந்த செயலை யாரோ வீடியோ எடுத்து வெளியிட அது இப்போது வைலராகி விட்டது. இந்த வீடியோவில் அஜீத் ரேசிங் உடையில் இருக்கிறார்.
தன்னை கேமரா படம் பிடிப்பதைக் கூட தெரியாமல் அஜீத் ஈகோ பார்க்காமல் இதைச் செய்துள்ளார். இதெல்லாம் ரத்தத்தில் இருப்பது என்று சிலர் கமெண்ட் கொடுத்துள்ளனர்.
அஜீத் குமார் நடிப்பில் அடுத்து குட் பேட் அக்லி படம் ரெடியாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகிக் கொண்டுள்ளது. கடந்த 30 வருடமாக நடித்து வரும் அஜீத் குமார் தற்போது ரேசிலும் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சான்டாவுக்கே கிப்ட் கொடுத்த அந்த மொமன்ட்.. A Gift To Santa!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
மறைவேடங்கள் நிறைந்த இவ்வுலகில்.. In the world of disguise
அன்புக்குரிய சான்டா.. Santa, the classy lovable one!
பிறந்தார் இயேசு பாலன்.. கொண்டாடுவோம்.. Merry Christmas, Merry Christmas!
{{comments.comment}}