அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதானாம்.. குட் பேட் அக்லி எப்போ தெரியுமா?

Jan 11, 2025,04:01 PM IST

சென்னை: விடாமுயற்சி  திரைப்படம் ஜனவரி 23ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


லைகா நிறுவன தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் ஆரவ் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ்சும்,படத்தொகுப்பினை என்.பி.ஸ்ரீகாந்த்தும் மேற்கொண்டுள்ளனர்.


இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றும், அதற்கான முறையான அனுமதியினை விடாமுயற்சி குழு பெறவில்லை என்றும், இதனால், பெரிய தொகையை பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனம் கேட்டு விடாமுயற்சி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது என்றும் கூறப்படுகிறது. தற்போது பிரேக் டவுன் பட தயாரிப்பு குழுவுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்துள்ளதாகவும், இதனையடுத்து விரைவில் படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த நிலையில், விடாமுயற்சி படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வருகிற 23ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் டீசர்  மற்றும் சிங்கிள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அஜித் ரசிகர்களின் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதேபோல குட் பேட் அக்லி படம்  ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகக் கூடுமாம். இந்த அப்டேட்டை யார் தந்திருக்கா தெரியுமா.. சாட்சாத் அஜீத்தான் தெரிவித்துள்ளார். துபாய் ரேஸில் பங்கேற்கபதற்காக சென்றுள்ள அவர் அங்கு அளித்த ஒரு பேட்டியில் இதைக் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களின் ஆதரவை தான் வெகுவாக மதிப்பதாகவும் கூறியுள்ளார் அஜீத்.


இது போதுமே அஜீத் என்று அவரது ரசிகர்கள் இப்போது உற்சாகமாக இதை வைரலாக்கி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்