Ranchi Test: எடுத்த எடுப்பிலேயே டாப்புக்குப் போன ஆகாஷ் தீப்.. வேற லெவல் Debut!

Feb 23, 2024,06:43 PM IST
ராஞ்சி: ராஞ்சியில்  நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுக பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமாகியிருக்கிறார். முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

இந்தப் போட்டியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சை எதிர்கொண்ட ஜாக் கிரான்லி கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் துள்ளி குதித்தார்.  தொடர்ந்து பென் டக்கெட்டையும் அபாரமாக அவுட்டாக்கினார் ஆகாஷ் தீப். அவரது மூன்றாவது விக்கெட்டாக வந்தவர்   ஒல்லி போப். எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் போப். அதுவும் டக் அவுட்டானார். தனது முதல் போட்டியிலேயே ஒரு போல்டு, ஒரு கேட்ச், ஒரு எல்பிடபிள்யூ என அசத்தினார் ஆகாஷ் தீப்.



தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அதிரடி காண்பித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். ஐபிஎல் பெங்களூரு அணிக்காக இவர் விளையாடுவதால் ஆர்.சி.பி.ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஏழ்மையான பின்னணி

இந்தியாவின் 313வது டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆகியிருக்கும் ஆகாஷ் தீப், பீகார் மாநிலம் சசராம் என்ற ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், குடும்பத்தின் வறுமை காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியிருந்தார். தனது மாமா கொடுத்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பினார். 

துர்காபூரில் ஓர் அகாடமியில் சேர்ந்து, தனது வேகத்தின் மூலம் அங்கிருந்த பயிற்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். மீண்டும் இவரது வாழ்க்கையில் விதி விளையாடியது. குறுகிய காலத்தில் தந்தை மற்றும் அண்ணனை இழந்தார். இதனால் மீண்டும் 3 ஆண்டுகள் கிரிக்கெட்டை மறந்து விட்டு வேலைக்கு சென்றார் ஆகாஷ் தீப். ஆனாலும் அவரை கிரிக்கெட் விடவில்லை. மீண்டும் தனது விடாமுயற்சியால் அதற்காக பாடுபட்ட அவர் இன்று, தனது முதல் போட்டியிலேயே நாடறிந்த கிரிக்கெட் முகமாக மாறியுள்ளார். இவரது கடந்த காலமும், அவர் கடந்து வந்த பாதையும், ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது எனலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்