அலபாமா: அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் கூடிய ஒரு பெண் அடுத்தடுத்து 2 குழந்தைகளைப் பிரசவித்து மருத்துவ உலகை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மருத்துவ உலகில் இதுபோல நடப்பது மிக மிக அரிதானது. அலபாமாவைச் சேர்ந்த கெல்சி ஹேட்சர் என்ற அந்தப் பெண்ணுக்கு 2 கருப்பைகள் உள்ளன. இந்தப் பெண் ஒரே சமயத்தில் 2 குழந்தைகளைக் கருத்தரித்தார். இப்போது அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். 2 நாட்கள் இடைவெளியில் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு ராக்ஸி லாய்லா, ரிபெல் லேகன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
முதல் குழந்தை 19ம் தேதி இரவு 7.49 மணிக்குப் பிறந்தது. 3வது குழந்தை 20ம் தேதி காலை 6.09 மணிக்குப் பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் சரியான எடையில் நலமாக உள்ளனவாம். இது அவருக்கு நான்காவது பிரசவமாகும். 17 வயதில்தான் தனக்கு இரண்டு கர்ப்பப் பைகள் இருப்பது கெல்சிக்கு தெரிய வந்தது.
அலபாமா பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த அதிசயக் குழந்தைகள் பிரசவம் நடந்தது. இதுகுறித்து கெல்சி கூறுகையில், எனது மிராக்கிள் குழந்தைகள் வந்து விட்டனர். இவர்கள் வெற்றிகரமாக வெளியில் வர டாக்டர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு நன்றிகள் என்று கூறியுள்ளார் கெல்சி.
பிறந்த இரு குழந்தைகளும் fraternal twins எனப்படும் இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இரட்டைக் கர்ப்பப் பையுடன் இருக்கும் பெண்கள் மிக மிக அரிதானவர்கள். 2019ம் ஆண்டு வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இதுபோல இரட்டைக் கர்ப்ப பைகளுடன் கருத்தரித்திருந்தார். ஆனால் அவருக்கு குழந்தைகள் குறைப் பிரசவமாக பிறந்தன.
ஆனால் கெல்சிக்கு இதுவரை பிறந்த அத்தனை குழந்தைகளுமே ஆரோக்கியமாக உள்ளனர். ஒருமுறை கூட அவருக்கு அபார்ஷன் ஆனதில்லையாம். மேலும் இதுவரை நடந்த 4 பிரசவமுமே அவருக்கு நார்மல் பிரசவம்தான் என்பது இன்னொரு ஆச்சரியமாகும்.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
{{comments.comment}}