மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதியுடன் வருகை தந்து கண்டு ரசித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டு பொங்கலன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலை 7 மணி அளவில் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இவருடன் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முதலில் வாடிவாசலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பிறகு தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறிப் பாய்ந்து அதகளம் செய்து வருகின்றன. பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் மல்லுக்கட்டி தங்கள் வீரத்தை பறை சாற்றி வருகின்றனர்.
துணை முதல்வருடன் அவரது மகன் இன்பநிதியும் வந்துள்ளார். அவருடன் அவரது நண்பர்களும் வந்துள்ளனர். அப்பாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இன்பநிதி ஜல்லிக்கட்டை ஜாலியாகவும், உற்சாகமாகவும், திரில்லாகவும் கண்டு களித்தார். அவருக்கு அவ்வப்போது உதயநிதி ஸ்டாலின் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், ட்ரோன் மூலம் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தும் உதயிதி ஸ்டாலினும், இன்பநிதியும் ரசித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1100 காளைகளும், 900 மாடுபிடி வீடுகளும் வீரர்களும் பங்கேற்று உள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் சைக்கிள், அண்டா, டிவி, கட்டில் மெத்தை என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
குறிப்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இரண்டாம் பரிசாக ஷேர் ஆட்டோ வழங்கப்பட உள்ளது. அதேபோல் கையில் பிடிபடாமல் சீறிப் பறக்கும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதிகளில் கூட்டம் அலைமோதி வருவதால் 2500 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மோதிரத்தை பரிசாக வென்றது. அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காளை பிடிபடாமல் பரிசை தட்டி சென்றது. அதேபோல் நடிகர் சூரி மாட்டை அடக்குபவர்களுக்கு சைக்கிள் பரிசை பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த மாடும் பிடிபடாமல் சென்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}