- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்
வயிற்றுப் பசியோ
பகலெல்லாம் வாட்டிட,
பட்டினியைப் பார்த்து
இரவுகளில் கண்கலங்கிட...
இருந்தும் பயனில்லை என்றே
பறந்திட எண்ணி,
பயணப் பொதியுடன்
பறந்தாள் அரபு தேசம்...
காண்பது புதுமை,
கேட்பது அறியாமை,
அகதியானவள் ஆறுதலுக்கும்
அருகிலே யாரும் இல்லை...

வேலைக்குப் பஞ்சம் இல்லை,
வேளைக்கு உண்பதும் இல்லை,
தூக்கத்தையும் துயரத்தையும்
தொலைத்த காசு...
கையிலே இருப்பதும் இல்லை,
கடன் தீர்வதும் இல்லை,
மெழுகுவர்த்தி போலவே
வெளிநாட்டுப் பயணம்...
அரபியின் ஆடைகளோ
பார்ப்பதற்கு வெண்மை,
சிலரது மனங்களோ
அழுக்கில் கிடக்கும்...
நாள்களும் மாறுபடும்,
வேலைகளோ மாறாது,
ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் துன்பங்கள்...
விட்டில் பறவைபோல
தூரத்தில் பார்க்கையிலே
அழகோ அழகுதான்,
அருகிலே வந்து பார்...
அவரவர் துன்பங்கள்
ஆடைகள் நனைந்திடும்,
அவ்வளவு கண்ணீர்க்
கதைகள் ஒளிந்து கிடக்கும்...
ஊரே பேதலிக்கும்,
முடிந்தவரை வசைபாடும்.
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
{{comments.comment}}