ஹைதராபாத்: புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜூன் கிட்டத்தட்ட ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படம் நாளை வெளியாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் தான் புஷ்பா 2. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதன் அட்வான்ஸ் புக்கிங் தற்போது 100 கோடியை தாண்டியுள்ளதாம். அதை விட அதிக வசூலை அல்லு அர்ஜூனின் ஸ்டார்டம் முதல் நாளில் ஈட்டித் தரும் என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட நிலையில், இன்றளவும் அதன் வசூல் வெறும் 110 கோடி என்று செல்லப்பட்டு வருகிறது. கங்குவா படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில், கங்குவா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய படமான புஷ்பா 2 படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அல்லு அர்ஜூனின் ஸ்டார்டம் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கிலேயே இதுவரை 100 கோடி வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறிய நடிகர் அல்லு அர்ஜூன், புஷ்பா 2 படத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார். புஷ்பா 2 படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய நடிகர்களில் இதற்கு முன்னர் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களான விஜய் மற்றும் ஷாருக்கான் சம்பளம் 275 கோடி என்ற நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தின் மூலம் 300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
புஷ்பா 2 மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆனால் அல்லு அர்ஜூனின் சம்பளம் இதை விட அதிகமாகவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}