பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கும் முன் ,10 மணி நேரத்தில் 4 புள்ளி 6 கிலோ உடல் எடையை குறைத்து அமன் ஷெராவத் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அமன் பெற்றுள்ளார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமன் 61.5 கிலோ எடை இருந்துள்ளார். இது இவர் இருக்க வேண்டிய எடையை விட கிட்டதட்ட 4.6 கிலோ எடை அதிகமாகும். இது பயிற்சியாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோத வேண்டியிருந்தது. ஏற்கனவே வினேஷ் போகத் 100 கிராம் அதிக எடை இருந்ததற்காக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்து பயிற்சியாளர்களை உசுப்பி விட்டது. 100 கிராமிற்கே தகுதி நீக்கம் என்றால், இவ்வளவு எடை அதிகமாக இருந்தால் என்னாகுமோ என்று அமன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் களத்தில் குதித்தனர்.
அரையிறுதி போட்டி முடிந்த கையோடு மாலை 6.30 மணி அளவில் தொடங்கி இரவு முழுவதும் 6 பயிற்சியாளர்கள் அமனுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளைக் கொடுத்தனர். ஒரு மணி நேரம் வெண்ணீர் குளியல், டிரெட் மில்லில் ஒரு மணி நேரம் ஓட்டம், அதன்பிறகு சானா குளியல், லேசான ஜாக்கிங், வேகமாக ரன்னிங் என விடிய விடிய பயிற்சியில் ஈடுபட்டார் அமன்.
இரவு முழுவதும் அமன் கடுமையான பயிற்சி எடுத்த நிலையில், கிட்டதட்ட 10 மணி நேரத்திற்குள் அமன் 4.6 கிலோ எடை குறைந்தார். 57 கிலோ எடை பிரிவினர்களுக்கான போட்டிக்கு 56.9 கிலோவாக குறைந்தார். பயிற்சியின் இடை இடையே அசதி ஏற்படாமல் இருக்க எலுமிச்சை சாறுடன், தேன் கலந்த நீரும், திரவ ஆகாரமும் அமனுக்கு தரப்பட்டது. பயிற்சியின் முடிவில் அமனின் எடை எதிர்பார்த்தாற் போல குறைந்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பயிற்சிகள் முடித்தும் உறங்க கூட பயிற்சியாளர்கள் அனுமதிக்கவில்லையாம். இப்படி உடலை வருத்தி, கடுமையாக பயிற்சி செய்ததன் பலனாக, போட்டியில் வென்ற அமன் வெண்கலமும் வென்று அசத்தினார். மேலும் மிகவும் இளம் வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}