சென்னை: வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 21 வது படமாகும். முதன் முதலில் அவருடன் இணைந்து சாய்பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் புவன் அரோரா , ராகுல் போஸ் , லல்லு , ஸ்ரீகுமார் , ஷியாம் மோகன் , அஜய் நாக ராமன், மீர் சல்மான் மற்றும் கௌரவ் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் முகுந்தன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளி வர உள்ளது.
இப்படத்தின் சென்சார் முடிவடைந்த நிலையில் இப்படம் சூப்பராக வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால் ரசிகர்கள் அமரன் பட வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்து வருகின்றனர். அமரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகளுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}