அச்சச்சோ.. ஜெகன் மோகன் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே ரிசைன் செய்த அம்பட்டி ராயுடு!

Jan 06, 2024,06:33 PM IST
அமராவதி: ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் குழப்பியடித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அம்பட்டி ராயுடு. இந்திய கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர். ஐபிஎல் போட்டிகளிலும் அதிரடியாக ஆடியவர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை. இந்த விரக்தியில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார் அம்பட்டி ராயுடு. இந்த சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம் பெறவில்லை.



இந்த நிலையில் கடந்த வாரம் ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் அம்பட்டி ராயுடு. ஆனால் இன்று திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொஞ்ச காலத்திற்கு தான் அரசியலிருந்து விலகியிருக்க விரும்புவதாக அவர் காரணம் தெரிவித்துள்ளார். ஆனால் சேர்ந்த வேகத்தில் விலக வேண்டும் என்றால் ஏதாவது பெரிய காரணம் இருக்க வேண்டும்.. ஏதாவது நிர்ப்பந்தம் வந்ததா.. யாரேனும் மிரட்டினரா என்று பல்வேறு கேள்விகளை சமூக வலைதளத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர்.



ஆந்திர மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. லோக்சபா தேர்தலும் வரவுள்ளது. இந்த நிலையில்தான் அம்பட்டி ராயுடு ஜெகன் மோகன் கட்சியில் சேர்ந்திருந்தார். அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அவர் போன வேகத்திலேயே ரிட்டர்ன் ஆகி விட்டார்.

என்ன மாயமோ, என்ன காரணமோ.. ராயுடுவுக்கே வெளிச்சம்!

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்