சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவால் வெல்ல முடியாது என்றால் எங்களைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும்? அமித்ஷாவின் வியூகம் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே பாஜவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே கட்சி திமுக தான். பாஜகவால் வெற்றி கொள்ள முடியாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். பீகாரில் வெற்றி பெற்றுவிட்டோம் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று அமித்ஷா கூறுகிறார். அவரது படையையே கூட்டி வந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது என வாய் சவடால் விட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியாது என்றால் பாஜகவைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். திமுகவை வீழ்த்தும் சக்தியாக பாஜக மாறிவிட்டதால் எந்த கூட்டமாக இருந்தாலும் பாஜகவைப் பற்றியம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியின், அமிர்ஷாவின் வியூகம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சம் தான் திருவண்ணாமலையில் வெளிப்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை தரவில்லை என்ற தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் காங்கிரஸ் மிரட்டி வருகிறது. இந்த பதற்றத்தில் தான் பாஜகவை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக என்பது வலுவான கட்சி அல்ல. சிறுபான்மை மதத்தினரின் வாக்கு வங்கி இல்லாவிட்டால் திமுகவுக்கு எந்த தேர்தலும் வெற்றியே கிடைக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக சில சிறு கட்சிகள் துணையுடன் தனித்துப் போட்டியிட்டபோது படுதோல்வி அடைந்தது. ஆனால், அந்த தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளை வென்றது. தனித்துப் போட்டியிட்டால் ஒரு நாளும் திமுகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது மட்டுமல்ல, ஒரு சில தொகுதிகளில் கூட வெல்ல முடியாது என்பதை 2014 மக்களவைத் தேர்தல் நிரூபித்தது.
1967, 1971, 1989, 1996, 2006, 2021 என ஆறு சட்டமன்ற தேர்தல்களில் திமுக வென்று ஆட்சி அமைத்துள்ளது. 1967 ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்தும், 1971 காங்கிரஸ் பிளவு பட்டதால் ஏற்பட்ட பலமுனை போட்டி, எம்ஜிஆர் செல்வாக்காலும், 1989 அதிமுக பிளவுபட்டதாலும், 1996 இல் காங்கிரஸ் பிளவு பட்டதாலும், 2006 தேர்தலில் தேமுதிக வாக்குகளை பிரித்ததாலும், 2021 ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட குழப்பங்களாலும் தான் திமுக வென்றது. ஆறு முறையில் அரசியல் விபத்துகளால் வென்ற திமுக 7 ஆவது முறையாக அதுபோன்ற அரசியல் விபத்து நடக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறாத திமுக இந்த முறையும் வெல்லப் போவதில்லை.
1996 ஆம் ஆண்டே தனித்துப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நுழைந்த கட்சி பாஜக. 1998,1999 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் பெரும் வெற்றி பெறச் செய்தார்கள். திமுகவின் சிறுபான்மையினரை தாஜா செய்யும் இந்து விரோத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை கூட்டத்தில் 50 ஆண்டுகள், 40 ஆண்டுகள், 30 ஆண்டுகள் திமுகவுக்காக உழைத்த பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களை எல்லாம் தனது மகன் உதயநிதியின் புகழ் பாட வைத்ததுதான் ஸ்டாலினின் சாதனை. அண்ணா காலத்தில் இருந்து அரசியல் செய்யும் மூத்த தலைவர் துரைமுருகனை முதலமைச்சர் ஆக்காமல், மகனை துணை முதலமைச்சர் ஆக்கி குடும்ப ஊழல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை கூட மதிக்காமல் காட்டாட்சி நடத்தி வரும் பாசிச திமுக ஆட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}