பூரி: ஒடிசாவில் வீடு இல்லாமலும், சாப்பிடக் கூட வழியில்லாத கொடுமையான வறுமையில் வாடும் மூதாட்டி ஒருவர் தனது ஏழு வயது பேரனை 200 ரூபாய்க்கு விற்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாட்டியா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி சோரன் ராய்ப்பால் என்பவர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார். இவருடன் அவரது 7 வயது பேரன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு வீடு இல்லை, நிலம் இல்லை, எந்த ஒரு அரசாங்க நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதனால் மூதாட்டி தனது பேரனுக்கு உணவு கொடுக்க கூட கையில் பணம் இல்லாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.
மூதாட்டியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகனும் காணாமல் போனார். மருமகள் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மூதாட்டி ஒற்றை ஆளாக இருந்து தனது பேரனை யாசகம் பெற்று பேரனை வளர்க்க மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார். தனது பேரனை வளர்க்க தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று உதவி கோரினார். ஆனால் சகோதரியின் உடல் நிலையும் மோசமான காரணத்தால் தனது பேரனை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது 7 பேரனை 200 ரூபாய்க்கு விற்றுள்ளார் பாட்டி. இதனை அறிந்த உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் ரஸ்கோவிந்த்பூர் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலக அதிகாரிகள் மூதாட்டியை சந்தித்து விசாரித்தார்.
அப்போது அந்த மூதாட்டி குழந்தையை நிதி ஆதாயத்திற்காக விற்கவில்லை. குழந்தையை இனிமேல் பராமரிக்க முடியாததால், தனது பேரனுக்காவது வீடும் சிறந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு தம்பதியினரிடம் ரூபாய் 200 க்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். அதே சமயத்தில் மூதாட்டிக்கு அரசு உதவிகள் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}