- ஆனந்தி.ச
“யக்காவ் அந்த பாத்திரத்த எல்லாம் எடுத்து வெளிய போடுக்கா” புள்ளைய ஸ்கூல்லேர்ந்து கூட்டியாந்து வூட்ல உட்டுட்டு ஓடியாந்துடுறேன்.. சொல்லிக்கொண்டே சிட்டாய் பறந்தாள் பச்சையம்மாள்..
"பச்சை .." மாதவி பலமாக கூப்பிடுவதற்குள் .. ஸ்கூட்டியில் கண் எட்டாதூரம் போயிருந்தாள் பச்சையம்மாள்.
மாதவி வீட்டில் 15 வருடங்களுக்கு மேலாக வேலைப்பார்த்து வருபவள். அவளுக்கு கல்யாணம் ஆனதும் இவள் வீட்டில் வேலை பார்க்கும்பொழுதுதான் . அவளின் கணவன். ரங்கனும் இவளுக்கு பரிச்சயமானவன் தான். பலநாள் பச்சையம்மாளிற்கு பதில் ரங்கன் பாதி நாள் வீட்டு வேலை செய்ய வருவதுண்டு . பச்சையை விட பாத்திரம் துலக்குவதாகட்டும், வீடு பெருக்கி சுத்தம் செய்வதாகட்டும் மிகவும் நேர்த்தியாகவே செய்வான். ஆரம்பத்தில் ஓர் நாள் பச்சையம்மாளுக்கு உடல் நலம் சரியில்லாத பொழுது செய்யவந்தவனை, இப்பொழுது அடிக்கடி அனுப்பிவைக்கிறாள் . முதலில் ஏதோ மாதிரி இருந்த மாதவிக்கு பிறகு பச்சையை விட ரங்கனே நன்றாக செய்வதாக உணர்ந்து அனுமதித்தாள்.
மாதவி வீட்டிற்கு வரும் உறவினர் வந்த நேரத்தில் ரங்கன் வந்தால் தூக்கம் விசாரிப்பதைப்போல , என்ன உங்க வீட்ல ஆம்பள வேலைக்காரரா? “ என கேட்பார்கள்.இவளும் ஆரம்பத்தில் பொறுமையாக பதில் சொன்னவள் சிறிது காலத்திற்கு பிறகு , “ அதுக்கென்ன இப்போ ? ஆம்பள வீட்டு வேலை செய்யக்கூடாதா ? எனக்கேட்டு அவர்கள் வாயை அடக்குவாள்.
“ அக்கா “ என குரல் கொடுத்துக்கொண்டே துடப்பத்தை கையிலெடுத்த பச்சையின் பின்னால் அவளின் இரண்டு மகன்களும் அவள் சேலையை பிடித்தபடியே நின்றுகொண்டிருக்க, அட என்ன பச்சை அதுக்குள்ள வந்துட்ட ? என்றவளுக்கு

“எங்க வூட்டுக்காரரு பாதி தூரம் கூட்டியாந்து உட்டாரு அக்கா “ ,என்ற பச்சை “
“அவர் ஒரு வேலையையும் உருப்படியா செய்ய மாட்டாரு அக்கா” என்று கணவனையும் குறை சொல்ல ஆரம்பித்தாள்,
மாதவிக்கோ தன் கணவனின் முகம் கண்முன் வந்து சென்றது ..
குடித்த காபி டம்பளரை கூட குடித்த இடத்தில் வைப்பான் அவள் கணவன் .. இதைவிட . இன்னைக்கு என்ன டிபன் ? எனக் கேட்டு கிச்சனுக்கு வருவான் .. இவள் அடுப்படியில் போராடிக்கொண்டிருப்பாள் , சப்பாத்தி பாதி சுட்டுக்கொண்டிருப்பாள் . அதை கூட எடுத்து செல்லமாட்டான் . ஹாலில் போய் உட்கார்ந்தபடி,”மாது பசிக்குது டிபன் கொடுக்குறியா ? எனக்கேட்பவனை காட்டிலும் பச்சையின் கணவன் மிகத்தங்கம் ..
ஏங்க இத கொஞ்சம் பிடிக்கிறீங்களா? இதை கொட்டிறீங்களா? எனக்கேட்டால் இவளுக்கு வசைப்பாட்டுதான் . என்னவோ சொல்லக்கூடாததை சொன்னமாதிரி கோவப்படுவான் .. இதை கூட செய்யத்தெரியல என்ன குடும்ப பெண் நீ ? என்பான். இதற்கும் குடும்பபெண்ணிற்கும் என்ன சம்பந்தம் ? எனத்தனக்குத்தானே கூறிக்கொள்வாள்.
ஆனால் எல்லாவித வேலைகளை செய்யும் தன் கணவனை குறைசொல்லும் பச்சையை நினைத்தால் மிக மிக கோபம் வந்தது.
குழந்தைகள் இரண்டும் பின்னால் சென்றபடியே இருக்க .. போனை எடுத்தவள் .. இத பாருய்யா வரியா ? இந்த புள்ளக என்ன வேலை செய்ய விட மாட்டேங்குதுக .. என்றபடி பட்டென்று போனை வைத்தவள் .. இருக்கா அவர் வந்தவுடனே புள்ளைகள அவர்கிட்ட விட்டுட்டு வந்து பெருக்கி துடைக்கிறேன் என்றாள். துடப்பம் நடுவீட்டிலேயே வைத்து சென்றவள்தான் .. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாதவி .. பாத்திரங்கள் கொல்லைப்புறம் போட்டது போட்டபடி கிடக்க .. துடப்பமும் போட்டப்படி இருக்க போனவளை மட்டும் ஒரு மணி நேரமாக காணோம்.
மாதவிக்கு வேலை எதுவும் அதிகமாக செய்யக்கூடாது என்ற காரணத்தினாலையே வேலை செய்வதற்கு ஆள். அவள் நன்றாக இருந்தாலெனில் அவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பாள். வீட்டில் யாரும் அவளுக்கு உதவ மாட்டார்கள் .
“அதான் பச்சையம்மா இருக்காளே அவள் செய்ய சொல்லு எனச்சொல்வார்கள் “ .. ஆனால் இந்த பச்சையம்மாளோ , வாம்மா மின்னல் என்ற மாதிரி பட்டென்று வந்து போய்விடுவாள் .. பாதி நாள் அவள் கணவன் ரங்கன் தானே வருகிறான்? .அவனிடம் எப்படி வேலை வாங்கமுடியும் ? என்று நினைத்தபடியே இருக்க ஒரு மணி நேரமும் ஆயிற்று.
வாசலில் நிழலாடியதை பார்த்து வந்தவளுக்கு , வந்தது ரங்கன் என்றவுடன் சிறிது கோபம்தான் வந்தது . ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு, “எங்கப்பா பச்சை? “ என்றாள் .
புள்ளைகளை டியூசன் விட போயிருக்கு அக்கா , என்றவனிடம் பச்சையிடம் செய்ய சொல்லவேண்டியிருந்ததை இவனிடம் எப்படி சொல்வது என்று நினைக்கும்போதே, கையில் துடப்பத்தை எடுத்து நேர்த்தியாக பெருக்க ஆரம்பித்தான்.
வீட்டை சுத்தமாக பெருக்கி துடைத்தும் பாத்திரம் கழுவி அடிப்படை மேடையில் வைத்துவிட்டும் சென்றான்..
மறுநாள் காலையில் வந்த பச்சம்மாளை மேலிருந்து கீழே பார்த்த மாதவி கேள்விகளை கேட்கும் முன்னரே முந்திக்கொண்டாள் பச்சை ..” இந்தாளோட பெரிய இம்சை அக்கா . அவரு… அவளை பேச விடாமல் இடையில் குறுக்கிட்ட மாதவியோ “ ஒரு வார்த்தை கூட பேசாத , உனக்கு எல்லா உதவியும் செய்கின்ற அவரை எப்பபார்த்தாலும் குறை சொல்வதே வழக்கமாய் போச்சு . போ . பல வீட்ல போய் பாரு யார் வேலை செய்யவாங்க யார் ஊர் சுத்துறாங்கன்னு .. நீ வேலை செய்யறேன்னு பைக் ல ஊர் சுத்துற .. உன் புருஷன் பாவம் .. அழகா உன்னை அனுசரித்து போறாரு , நீ செய்ய வேண்டிய வேலையையும் அவர் செய்யராரு. அவர எப்போபார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டு திரியுற .. போ .. முதல்ல இந்த குறை சொல்வதை நிறுத்திட்டு நிறைகளை மட்டும் பார்த்துட்டு அவரிடமும் கொஞ்சம்
அன்பா பேசு “என கத்தி தன் மனக்குமுறலை கொட்டினாள்..
அது வரையிலும் அவள் கத்துவதையே கேட்டுக்கொண்டிருந்த அவள் கணவனுக்கு தன் பிடரியில்
யாரோ குத்தியது போல உணர்ந்து, முதன் முதலாக தான் குடித்த காபி டம்பளரை அடுப்படியில் உள்ள சிங்கில் போட்டான். குறைகளை மட்டுமே கண்டுவந்த பச்சையம்மாளும் சிறிது யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர் ( ஆங்கிலம்), அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை)
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!
Tamil Short Story: அனுசரிப்பு
{{comments.comment}}