சென்னை: நடிகை அனந்திகா தனது எதிர்கால கனவு குறித்துக் கூறியுள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடி பாராட்டி வருகிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்தவர் அனந்திகா சனில்குமார். லால் சலாம் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை. இப்போது மலையாளம், தெலுங்கு என பிசியாக இருந்து வருகிறார். இவர் லேட்டஸ்டாக நடித்துள்ள படம் 8 வசந்தலு. இப்படத்தின் வருகைக்காக காத்திருக்கிறார் அனந்திகா.
படம் தொடர்பான புரமோஷன்களிலும் பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு புரமோஷனின்போது அவர் பேசும்போது தனது வருங்காலக் கனவுகள் குறித்தும் தனது ஆசையை பகிர்ந்திருந்தார். அதுதான் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனந்திகா அந்த பேட்டியில் கூறும்போது, எனக்கு சினிாவைத் தவிர நிறைய விருப்பங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அரசியல். எஸ்.. நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர விரும்புகிறேன். பெண்கள் அரசியலுக்கு வருவது புதிதல்லதான். ஆனால் இப்போது நான் வர மாட்டேன். எனக்கு 40 வயதாகட்டும். அதன் பிறகுதான் வருவேன். அதில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது கனவுகளில் ஒன்று என்று கூறியுள்ளார் அனந்திகா.
எல்லாத் துறைகளையும் போலத்தான் அரசியலும். முன்பு பெண்கள் அரசியலுக்கு வரவே பயப்படுவார்கள். ஆணாதிக்கம் மிகுந்த துறையாக அரசியல் இருந்ததே அதற்குக் காரணம். இப்போதும் கூட அப்படித்தான். பெண்களுக்கு முழுமையான அதிகாரத்தை இன்னும் ஆணாதிக்க அரசியல் தரவில்லைதான். ஆனாலும் அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் அனந்திகாவும் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
40 வயதில்தான் வரப் போவதாக கூறியுள்ளார். அதற்குள் தென்னிந்திய மொழிகளில் ஒரு சூப்பர் ரவுண்டு வந்து விடுவார். பிரபலமும் ஆகி விடுவார். எனவே, அவர் எதிர்காலத்தில் எந்த மாநில அரசியலுக்கு வருவார்.. கேரளாவா, தமிழ்நாடா அல்லது ஆந்திராவா என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகியுள்ளது.
71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!
எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?
6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!
கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு
பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!
எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?
{{comments.comment}}