அதுல பாருங்க.. அத்தனை வரவேற்பிலும்.. அன்பில் போட்ட "அந்த ஒத்த வார்த்தை"!

Jul 26, 2023,02:29 PM IST
திருச்சி: திருச்சியில் இன்று நடைபெறும் திமுக தேர்தல் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருச்சியில் நடைபெறும் திமுக தேர்தல் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக திருச்சி திமுக சார்பில் தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்கும் முகவர்களுக்காக பிரமாண்ட விருந்துக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அசைவ உணவும், பிரியாணியும் ஏற்பாடு செய்துள்ளனர்.



இந்த  நிலையில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி மண்ணின் மைந்தருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டுள்ள வாழ்த்துதான் பலரையும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு வாழ்த்தை வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள வாசகம்தான் ஹைலைட்டே.

அந்த போஸ்டரில்,நாடும் நமதே நாற்பதும் நமதே என்று போட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வெற்றிப் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார்.  பின்னணியில் பிரமாண்டமாக இந்தியா மேப்.. பக்கத்தில் ஒரு வாசகம் போட்டிருக்கிறார்கள்.. அதைத்தான் நீங்க முக்கியமாக படிக்கணும்.. Welcome our ED (Education Developer) என்ற அந்த வாசகம்தான் பலரையும் கவர்ந்துள்ளது.

சமீப காலமாக திமுக அமைச்சர்கள், புள்ளிகள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்து வந்து போகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர் ரெய்டுக்குள்ளாகி கடைசியில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சமீபத்தில் அதிரடி ரெய்டுக்குள்ளானார். அவரைக் கூப்பிட்டு பல மணி நேரம் விசாரிக்கவும் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத்துறை ஆயத்தமாகி வருவதாக  சொல்லப்படுகிறது. கே.என். நேரு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் அமலாக்கத்துறை ஸ்கேனரில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஈடி என்ற வார்த்தையை வைத்து அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டுள்ள வரவேற்பு திமுகவினரை தாறுமாறாக கலகலப்பாக்கியுள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்