அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

Jan 07, 2026,05:14 PM IST

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை சந்தித்த அன்புமணி, தனது தரப்பு பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.


அதிமுக கூட்டணியில் பாஜக, அதிமுக தவிர பெரிய கட்சிகள் ஏதும் இல்லாமல் இருந்ததால் கூட்டணி இறுதி செய்யப்படாமல் இருந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை அதிமுக கூட்டணியை இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா தமிழகம் வந்து சென்று அடுத்த நாளே அன்புமணி போய் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார். 


அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துள்ள நிலையில் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்ல உள்ளதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியும் டில்லி செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. 




அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. மக்கள் விரோத சக்தியான திமுக.,வை வீழ்த்தும் நோக்கில் ஒன்றிணைந்துள்ள கூட்டணி என அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.  மக்கள் விரும்பும் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பது எங்களின் நடைபயணத்தின் போது தெரிந்தது என அன்புமணியும் தெரிவித்துள்ளார்.


ஜனவரி 20ம் தேதிக்குள் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் அதிமுக தீவிரமாக இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்