மார்கழி 28 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 28 : கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

Jan 11, 2025,04:41 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 28 :


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.




பொருள் :


குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, அவற்றை மேய்த்து, தயிர் சாதம் உண்டு வாழ்ந்து வருபவர்கள். பெரிய அளவில் அறிவு ஏதும் இல்லாதவர்கள். ஆனால் ஒன்றும் மட்டும் எங்களுக்கு தெரியும். ஆயர் குலத்தில் தோன்றிய உன்னை தலைவனான அடைந்ததால் எங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைத்து, வைகுண்டம் அடையும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும். பிறவிப் பயனாக இதை நாங்கள் அடைந்துள்ளோம். உன்னுடன் எங்களுக்கு உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. விரதம் இருக்கும் சரியான முறை தெரியாத அறியாத சிறு பிள்ளைகள் நாங்கள். கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என்றெல்லாம் உன்னை உரிமையுடன் உன் மீது கொண்ட பக்தியால் அழைத்தோம். உன்னை ஒருமையில் அழைத்தததற்காக எங்கள் மீது கோபித்து கொள்ளாதே. எங்களின் இறைவனே! எங்களின் இந்த நோன்பை ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு உன்னுடைய அருளை தருவாயாக.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்