திருப்பாவை பாசுரம் 03 :
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கி பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
தனது திருவடிகளால் மூன்ற உலகையும் அளந்த உத்தமனான திருமாலை எண்ணி பாவை நோன்பிருந்து, நாம் அவரின் நாமங்களை பாடினால் மாதந்தோறும் தவறாமல் மழை பெய்யும். இதனால் வயல்களில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் வானம் அளவிற்கு வளர்ந்து, விளைச்சலை தரும். அந்த வயல் வெளியில் மீன்கள் துள்ளி விளையாடும். எங்கும் செழிப்பாக இருக்கும் என்பதால் பூக்களில் தேன் எடுக்க வண்டு கூட்டம் தேடி வரும். செழித்து வளர்ந்த புற்களை மகிழ்ச்சியுடன் மேய்ந்து விட்டு வரும் பசுக்கள், வள்ளலைப் போல் வாரி வாரி பால் கொடுக்குள். இதனால் நம்முடைய வீடுகளில் எப்போதும் குறைவில்லாத செல்வம் நிறைந்து காணப்படும் பெண்களே என்கிறாள் ஆண்டாள்.
விளக்கம் :
நல்லவர் ஒருவர் இருந்தால் அவரால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் மழை பெய்யும் என்பார் திருவள்ளுவர். அது போல் இறைவனின் பெருமைகளை உணர்ந்து நாம் ஒரு சிலர் பக்தி செய்வதால் நாம் நன்மை அடைவதுடன் உலகத்தில் உள்ள அனைவரும் செழிப்பான, குறைவில்லாத வாழ்க்கையை வாழ்வார்கள். ஒருவர் மனதார பக்தி செய்தாலும் இறைவன் மனம் மகிழ்ந்து, அவரை சேர்ந்தவர்களுக்கும் வேண்டிய நலன்களை வாரி வழங்குவார் என இந்த பாடலில் விளக்கி உள்ளார் ஆண்டாள்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}