அமராவதி: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இரு மாநில அரசுகளுக்கும் தலா ரூ. 50 லட்சம் நிதியை வழங்கியுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புடமேரு ஆற்று வெள்ளமும், கிருஷ்ணா ஆற்று வெள்ளமும் விஜயவாடா நகரை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, எலுரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் கனமழையில் சிக்கியுள்ளன. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் அந்த அந்த மாநிலங்கள் செய்து கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கு திரைப்பிரபலங்கள் வெள்ள நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இரு மாநிலங்களுக்கும் தலா 25 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். மகேஷ்பாபு தலா 25 லட்சம் அறிவித்துள்ளார். ஜூனியர் என்டிஆர் தலா 50 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}