சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள டி. குகேஷை Our Own Telugu Boy என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் அவரது இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பிறந்தவர் டி. குகேஷ். தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழனாக, தமிழ் உணர்வோடு, தமிழ்நாட்டவராக இருப்பவர் குகேஷ். செஸ் உலகில் தனக்கென தனி பாதையை வகுத்து இன்று புகழின் உச்சியைத் தொட்டுள்ளார். தமிழ்நாடு அரசு குகேஷுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அவரது சாதனை பயணம் எந்த வகையிலும் தடைபடாமல் தொடர்ந்து உதவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதையெல்லாம் மறந்து விட்டு, குகேஷுக்கு ஒரு உதவி கூட செய்யாமல் இருந்து விட்டு, தற்போது அவர் புகழ் உச்சியை அடைந்துள்ள நிலைியல் அவரை தெலுங்குப் பையன் என்று உரிமை கொண்டாடி ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவரது இந்த பேச்சை பிரிவினைவாத, சுயநலப் பேச்சு என்று பலரும் கண்டித்து வருகின்றனர்.
டிங் லீரனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் டி. குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு மிகவும் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் குகேஷ் ஆவார். இதன் மூலம் செஸ் உலகில் புதிய வரலாறும் படைத்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரை இந்தியராகத்தான் பலரும் பார்த்துப் பாராட்டி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், விளையாட்டு உலகைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நமது தெலுங்குப் பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சிங்கப்பூரில் புதிய வரலாறு படைத்துள்ளார் குகேஷ். ஒட்டுமொத்த நாடும் இந்த அபார சாதனையைக் கொண்டாடி வருகிறது. அவர் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் இந்த வாழ்த்துச் செய்திக்கு பாராட்டுக்களை விட கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும்தான் அதிக அளவில் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யாரும் நாயுடுவின் இந்த கருத்துக்கு இதுவரை பதில் தரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 08, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
{{comments.comment}}