திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பக்தர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் ஏழுமலையானை வழிபாடு செய்து சொர்க்கவாசல் திறப்பை பார்ப்பதற்கு தேவையான டிக்கெட்டுகளை ரூ.300 விலையில் ஏற்கனவே தேவஸ்தனம் ஆன்லைனின் விற்பனை செய்தது. இதனையடுத்து இம்மாதம் 10,11 மற்றும் 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்களை நேற்று இரவு தேவஸ்தனம் வழங்க துவங்கியது. இந்த இலவச டோக்கன்கள் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கவுண்டர்கள் மற்றும் திருப்பதி மலையில் அமைக்கப்பட்ட ஒரு கவுண்டர்களிலும் விநியோகம் செய்யப்பட்டது.

இலவச தரிசன டோக்கன் மற்றும் தரிசன டிக்கெட் இல்லாதவர்களுக்கு இந்த 10 நாட்களும் அனுமதி கிடையாது என்பதினால், எப்படியாவது வைகுண்ட ஏகாதசி நாள் அன்று ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இலவச டோக்கன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தினால், இலவச டிக்கெட் வாங்குவதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதில் பலர் கிழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் எழுந்திரிக்க முடியாமல் போகவே அவர்களில் 6 பேர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 2 பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த 6 பேரின் குடும்பத்தினர்களுக்கும் தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}