டெல்லி: ஆம் ஆத்மி கட்சியோட கேரக்டர் போய் விட்டது. மது ஊழல், பணம் என்று அதற்கு அடிமையாகி தனது நல்ல பெயரை இழந்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனால்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரேவை மக்கள் மறந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த நாட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு டெல்லியில் அவரது தலைமையில் நடந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் மறந்திருக்க முடியாது. அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆனால் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து பிரதமராக நரேந்திர மோடி வந்ததும், அன்னா ஹசாரே ஆஃப் ஆகி விட்டார். அதன் பிறகு அவர் எந்தப் போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. அதேசமயம், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். டெல்லி, பஞ்சாபில் அவரது கட்சி ஆட்சியமைத்தது. இதில் இப்போது டெல்லியை ஆம் ஆத்மி கட்சி இழக்கிறது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு குறித்து ஹசாரே கருத்து தெரிவித்துள்ளா். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன். தேர்தலில் போட்டியிடும்போது, வேட்பாளர்களுக்கு ஒரு நல்ல நடத்தை இருக்க வேண்டும். நல்ல கொள்கை இருகக் வேண்டும். நல்ல பெயர் இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆத் ஆத்மியிடம் இவை எதுவுமே இல்லை.
மது ஊழலிலும், ஊழலிலும் அவர்கள் மூழ்கிப் போய் விட்டார்கள். கெஜ்ரிவாலின் நற் பெயர் போய் விட்டது. அரசியலில் ஒருவர் மீது புகார் வருவது இயல்புதான். ஆனால் அதிலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும். தங்களது தரப்பை நியாயப்படுத்த வேண்டும். தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மையே எப்போதும் வெல்லும்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது அதில் சேரக் கூடாது என்ற முடிவை எடுத்தேன். இப்போது வரை அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் ஹசாரே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}