சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். புகார் அளித்த மாணவியின் தனிப்பட்ட விபரங்கள், எஃப்ஐஆர் காப்பி உள்ளிட்டவைகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.கோர்ட் உத்தரவுபடி ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள ஞானசேகரனை போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}