சென்னை: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தனியாக வசித்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நாளை நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில்
தமிழக பாஜக சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எ்று தெரிவித்துள்ளார்.
கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
திருப்பூரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்!
Are you Ok?.. கேட்டதுமே அழுது விட்ட ஜனனி பொற்கொடி.. ஒரு நெகிழ்ச்சிக் கதை... say bye to STRESS!
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கொத்தவரங்காய் துவையல்.. ஈஸியா பண்ணலாம்.. சூப்பர் டேஸ்ட்டியா இருக்கும்!
அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!
அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!
{{comments.comment}}