சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இன்று காலை சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் திரளாக திறந்த தொண்டர்கள் உற்சாகமாக அண்ணாமலையை வழியனுப்பி வைத்தனர். மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து படிப்பை மேற்கொள்ளும் அண்ணாமலை காணொளி வாயிலாக கட்சியை கவனித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இந்த படிப்புக்கான செலவை லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே ஏற்றுள்ளதாம். இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை மூன்று மாத கால அரசியல் படிப்பை தொடங்க லண்டன் சென்றுள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டார் பாஜக அண்ணாமலை. அப்போது சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமாக அவரை வழியனுப்பி வைத்தனர். லண்டனில் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் தனது அரசியல் படிப்பை தொடங்கும் அண்ணாமலை மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாதம் இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.
அண்ணாமலை லண்டனுக்கு செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு பதிலாக மாற்றுத் தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன். எனது சண்டைகள் அறிக்கை மூலம் தொடரும். நான் வெளிநாட்டுக்கு படிக்க சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
ஒரு பக்கம், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக 17 நாட்கள் அமெரிக்கா சென்று இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இந்த நிலையில் இன்னொரு முக்கியக் கட்சியான பாஜகவின் தலைவர் அண்ணாமலை லண்டனுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}