சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். அவரைப் பார்த்து பாஜக பயப்படவில்லை. அக்டோபருக்குப் பிறகு அவர் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார் என்பதை மட்டும் அறிய விரும்புகிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் அரசியல் தொடர்பான படிப்புக்காக சென்றிருந்தார். அதை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பெரும் திரளாக திரண்டிருந்த பாஜகவினர் அவரை வரவேற்றனர். வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை அப்போதே நான் வரவேற்றுள்ளேன். இப்போதும் வரவேற்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் வந்திருக்கிறார். நிறைய பேசியிருக்கிறார். அதுகுறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். பாஜக தலைவர்கள் எதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதற்கெல்லாம் சொல்லியுள்ளனர்.

விஜய் அவர்கள் ஆக்டிவ் பாலிட்டிக்ஸுக்கு வரும்போது எங்களது கருத்துக்களை வைப்போம். மக்களுக்கு இது இன்னும் ஒரு வாய்ப்பு. மக்களே இதைத் தீர்மானிப்பார்கள். ஆனால் விஜய் அவர்கள் திராவிடக் கட்சிகள் பேசும் அதே சித்தாந்தத்தைத்தான் பேசுகிறார். நாங்கள் எங்களது இடத்தில் பத்திரமாக இருக்கிறோம். எங்களது பாதங்கள் வலிமையாக தாங்கி நிற்கின்றன. அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிடக் கொள்கைதான். எனவே பாதிப்பு யாருக்கு என்பதை அனைவரும் அறிவர்.
எப்போதுமே புதியவர்களைப் பார்த்து பாஜக பயப்படாது. விஜய் பெரிய நடிகர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்குப் பிடித்த நடிகர். பெரிய இடத்தைப் பிடித்தவர். அகில இந்திய அளவில் அதிக வசூல் தரக் கூடியவராக இருந்திருக்கிறார். படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அரசியல் களம் வேறு.
அக்டோபருக்குப் பிறகு அவர் எத்தனை முறை வெளியே வந்துள்ளார். ஆண்டு முழுவதும் மக்களுடன் இருக்க வேண்டியது அரசியல். இதற்கு விஜய் தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டு வரவார், ஜெயிப்பார் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். எங்களுக்குப் பயமில்லை. திராவிடக் கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. பாஜகவின் தேசிய வாக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. விஜய்யை கேள்வி கேட்கும் இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம் என்றார் அண்ணாமலை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தோளோடு தோள் சேர்ந்து நடப்போம்.. Balancing Relationship Is An Art
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
{{comments.comment}}