கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்.. தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Jun 22, 2024,05:21 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் உயிரிழந்த நிலையில், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று  தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினர்  தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். இதையடுத்து எச் ராஜா உட்பட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. 


அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக இந்த போராட்டம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,  கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், ஜம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச் ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பாஜக சகோதர சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாஜக சகோதர சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது.


இந்த அடக்குமுறைக்கு பாஜக அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும்,  கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்