ஆர்.எஸ். பாரதியை அனுப்பி பதில் சொல்கின்றனர்.. அண்ணாமலை பாய்ச்சல்

Aug 24, 2023,12:50 PM IST
கோவை: ‘‘ஆளுநருக்கும், அரசுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ தொடர்பில் தலைமை செயலாளர் தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், யார் கேள்விக்கு யார் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவில்லாமல் ஆர்.எஸ்.பாரதியை அனுப்பி பதில் சொல்ல வைத்துள்ளனர்’’ என தமிழ்நாடு பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆளுநரை பொருத்தவரை நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் ஆளுநருக்கு எந்தவிதமான ரோலும் கிடையாது. அந்த மசோதா இப்போது குடியரசு தலைவரிடம் உள்ளது. ஆளுநர் சில கருத்துகளை சொன்னால், அதனை குடியரசு தலைவரிடம் முறையிட வேண்டும். 



பீகாருக்கு ஆளுநர் கூப்பிட்டால் என்ன செய்வார்கள்?

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரி இல்லை, அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் மருத்துவம் படிக்க உதவுகிறது என ஆளுநர் சில தரவுகளை கூறியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், திமுக.,வினர் சீண்டிப்பார், தொட்டுப்பார், வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலை சந்தியுங்கள் என பேசுகின்றனர். சரி, பீகாருக்கு வாருங்கள், தேர்தலில் நிற்கலாம் என ஆளுநர் சொன்னால் என்ன செய்வார்கள்? 

திமுக.,வினருக்கு ஹிந்தி தெரியாமல் பீகாரில் எப்படி மக்களை சந்தித்து ஓட்டு கேட்பார்கள்? அல்லது நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வை ‘பாஸ்’ செய்துவிட்டு வாருங்கள் என ஆளுநர் சொன்னால் என்ன செய்வார்கள்? வாய் இருக்கு என்பதற்காக இதையெல்லாம் திமுக.,வினர் பேசக்கூடாது. 

ஆளுநரா வம்பிக்கிழுக்கிறார்கள்

உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் சீண்டிப்பார்ப்பதற்காக, கை தட்டலுக்காக கண்டதையும் பேசினால், பாம்பு திரும்ப வந்து கொத்திடும். ஆளுநருக்கும், நீட் தேர்வுக்கு இப்போது எந்த தொடர்பும் இல்லை. அது குடியரசு தலைவரிடம் சென்றுவிட்டது. எனவே, சம்பந்தம் இல்லாமல் திமுக.,வினர் ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்.



டிஎன்பிஎஸ்சி தலைவர் குறித்த பரிந்துரையை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இதற்கான தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டுமா அல்லது ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க வேண்டுமா? ஆளுநருக்கும், அரசுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ தொடர்பில் தலைமை செயலாளர் தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், திமுக.,வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் சொல்கிறார். 

இந்த அநியாயத்தை இந்தியாவில் எங்கும் பார்த்திருக்க முடியாது. அந்தளவிற்கு அரசை நடத்த தெரியாதவர்கள் அரசு பதவிகளில் உட்கார்ந்துள்ளனர்.யார் கேள்விக்கு யார் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவில்லாமல் ஆர்.எஸ்.பாரத���யை அனுப்பி பதில் சொல்ல வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்