சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டிற்கு டெல்லி எப்போதுமே out of control-தான் என கூறியிருந்த நிலையில், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி பதில் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகையை சுட்டிக்காட்டி, அமித்ஷா அல்ல. எத்தனை ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழ்நாடு எப்பயுமே டெல்லிக்கு out of control தான். அதாவது தமிழ்நாடு எப்பவுமே டெல்லியின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்காது. தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணை பாழாக்க துடிக்கும் பாஜகவுக்கும், அதற்கு துணை போகும் இனைமான இல்லாத அடிமைகளுக்கும், தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து சவால் விடுகிறேன். எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள். ஒரு கை பார்ப்போம். 2026லும் திராவிட மாடல் ஆட்சி தான் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு. க ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க ஸ்டாலின், நீங்கள் நேற்று Out of control என்று சொன்னீர்கள், ஆனால் உண்மையில், நீங்கள் தமிழக மக்களுடன் "Out of contact"ல் இருக்கிறீர்கள். அவர்கள் உங்கள் ஆட்சியின் கோபத்தைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது போன்ற படத்தில் இந்த அவுட் ஆப் கான்டாக்ட் வாசகத்தை போட்டு போஸ்ட் போட்டுள்ளார் அண்ணாமலை.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கெட் அவுட் மோடி, கோ பேக் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்று ஏகப்பட் ஸ்லோகன்களை திமுகவும், பாஜகவும் மாறி மாறி கையில் எடுத்து கதி கலங்க வைத்துள்ளன. இந்த வரிசையில் இனி out of control - out of contact ஆகியவையும் இடம் பெறுமா என்று தெரியவில்லை.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}