ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

Apr 03, 2025,03:04 PM IST

சென்னை: பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க, ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பாலகங்கள் அமைக்கப்படும் என சட்டசபையில் பால் வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார் .


2025- 26 ஆம் ஆண்டுக்கான பால்வளத் துறையின்  மானிய கோரிக்கைகள் சமர்ப்பித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்  பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். இது குறித்த அறிவிப்பில்,


 பாலில் கலப்படத்தை கண்டறியவும், 129 நவீனாக சிவப்பு பகுப்பாய்வு கருவிகள் வழங்கவும் ரூபாய் 6.45 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.


பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக ரூபாய்‌ 9.34 கோடி மதிப்பீட்டில் 1437 பால் பகுப்பாய்வு கருவிகள்  நிறுவப்பட உள்ளது.


பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை அதிகரிக்க ரூபாய் பத்து கோடி மதிப்பீட்டில் 500 புதிய ஆவின் பாலகங்கள்  தொடங்கப்பட உள்ளது.


14 மாவட்ட ஒன்றியங்களில் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.




மாதவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 2.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


கால்நடை பராமரிப்பு கடன், கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதற்காக ரூபாய் 2000 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.


165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு, தரமான பால் கொள்முதல் செய்ய தேவையான பால் பரிசோதனை உபகரணங்கள் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.


525 தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்க ரூபாய் 2.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 ‌ மாதவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும். 


வேலூர், விழுப்புரம், மாதவரம், ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 2.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



உம்பளச்சேரி இன பசு மாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய பால் பதிவு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 1.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கறவை மாடுகளுக்கான பசு தீவன தேவையை பூர்த்தி செய்ய ரூபாய் 72 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீவன விதைகள் வழங்கப்படும். அதேபோல் 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.


பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்க ரூபாய் 58 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட அளவில் சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.


பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ரூபாய் 2.10 கோடி மதிப்பீட்டில், 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும்.


செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இதற்காக ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


 100 சிறப்பு பரிசோதனை முகங்கள் நடத்தி கறவை மாடுகள் மடி நோய் கண்டறிய ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த கருத்தரங்குகள் நடத்தப்படும்.


கறவை மாடுகள் கன்று ஈனும் இடைவெளியை குறைப்பதற்காக ரூபாய் 1.73 கோடி மதிப்பீட்டில் 2000 மலடு நீக்க சிகிச்சைகள் மற்றும் சினை பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும். 



தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வகை பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும். 


தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக மாற்றி அமைக்கப்படும். 


ஆவின் விற்பனை முகவர்களின் நலம் கருதி அவர்களின் பங்களிப்பில் ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி உருவாக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்