வெளுத்து வாங்கும் வெயில்.. 1 டூ 5ம் வகுப்புக்கு.. இறுதித் தேர்வுகளை 17ம் தேதியுடன் முடிக்க உத்தரவு!

Mar 30, 2025,04:59 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு இறுதித் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. அதிலும் தற்போது பரீட்சை காலம் என்பதால் பிற்பகலில் தேர்வு எழுதச் செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் படும் கஷ்டத்தைக் கண்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தற்போது பிளஸ்டூ பரீட்சை முடிந்து விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுதவிர 1 முதல் 5ம் வகுப்புகளுக்குரிய இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




ஆனால் தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 21ம் தேதிக்குப் பதில், 17ம் தேதியடன் இறுதித் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இவர்களுக்கான தேர்வும் கூட ஏப்ரல் 9ம் தேதிக்குப் பதில் 7ம் தேதியே தொடங்கவுள்ளது. இந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையும் விடப்படவுள்ளது.


புதிய தேர்வு அட்டவணையையும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய அட்டவணை விவரம்:


1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.  இவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு தேர்வுகள் நடைபெறும். 


4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

2030 காமன்வெல்த் போட்டி.. அகமதாபாத்தில் நடத்த இந்தியா திட்டம்.. ஒப்புதல் அளித்தது IOA

news

தொடர்ந்து 4வது நாளாக குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி.. டேஸ்ட்டியானது.. ஹெல்த்தியானது.. லஞ்ச்சுக்கு பெஸ்ட் ரெசிப்பி!

news

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்.. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார் டாக்டர் மைத்ரேயன்

அதிகம் பார்க்கும் செய்திகள்