பெங்களூரில் அடுத்தடுத்து  விபரீதம்.. மெட்ரோ பணி நடைபெறும் சாலை பள்ளத்தில் விழுந்தவர் காயம்!

Jan 12, 2023,04:09 PM IST
பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் பெரிய தூண் விழுந்து ஒரு பெண், குழந்தை ஆகியோர் பலியான நிலையில், இப்போது மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் ஒருவர் விழுந்து காயமடைந்துள்ளார்.



பெங்களூருவில் மெட்ரோ பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நாகவரா பகுதியில் பணிகள் நடைபெறும் இடத்தில் ஒரு பெரிய தூண் திடீரென சாலையில் விழுந்ததில் டூவீலரில் கணவருடன் போய்க் கொண்டிருந்த இளம் பெண்ணும், அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ பணிகள் தொடர்பாக இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. மத்திய பெங்களூருவில் உள்ள ஷூலே சர்க்கிள் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் திடீரென சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.அதில் புனீத் என்பவர் தனது பைக்கோடு சிக்கிக் கொண்டார். அவரை அங்கிருந்தோர்  மீட்டுக் காப்பாற்றினர். அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

இதற்கிடையே,  மெட்ரோ பில்லர் விழுந்து பலியான பெண்ணின் குடும்பத்துக்கு மெட்ரோ நிறுவனமும், கர்நாடக அரசும் இணைந்து ரூ. 20 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட காண்டிராக்டர், பொறியாளர் உள்ளிட்டோர் மீது மெட்ரோ அதிகாரிகள் புகாரின் பேரில் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்