சென்னை: வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு நமக்கு மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு மழைக்காலத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள 2வது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். முதல் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பரவலாக மழையை மட்டுமே அது தந்து சென்றது. இந்த நிலையில் இன்று உருவாகியுள்ள தாழ்வு, உயர்ந்த மழையைத் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது புயலாக மாறக் கூடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் இது உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரும் விதம், திசை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே இதனால் நமக்கு என்னெல்லாம் சாதகம், பாதகம் என்பது தெரிய வரும். சென்னையைப் பொறுத்தவரை காலையிலிருந்தே மேக மூட்டமாக காணப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}