டெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஐபோன்களின் விலையை 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது ஆப்பிள் ஐ போன் நிறுவனம்.
ஐ போன் வாங்கும் மோகம் தற்பொழுது அனைத்து தரப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. ஐ போன் வாங்குவது ஒரு தகுதியாக இன்றைய இளைய தலைமுறையினர் கருதி வருகின்றனர். இத்தகைய ஐ போன்கள் விலை அதிகம் என்பதால், அதிகமானோருக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது 5,000 முதல் 6,000 வரை விலை குறைந்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ போன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் இருந்து ரூ.3000 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைவு ஐ போன் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிஐஆர்பி வெளியிட்ட தகவலின் படி, ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆப்பிள் ஐபோனுக்கு மாறுவது தற்போது அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில், புதிய ஐபோன் வாங்குபவர்களில் ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 17 சதவீதம் பேர் முன்னாள் ஆண்டராய்டு பயனர்களாக இருக்கின்றனர். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 10 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐ போன்களில் 99 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில உயர்நிலை ஐபோன் மாடல்களின் சிறிய தேர்வு மட்டுமே தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}