குட் நியூசுடன் ஐபோன் 15 சீரிஸ்களை வெளியிட்ட ஆப்பிள்!

Sep 13, 2023,09:40 AM IST
நியூயார்க் : ஐபோன் பிரியர்கள் ஆவலாக எதிர்பார்த்த ஐபோன் 15 சீரிஸ் மற்றும் சீரிஸ் 9 ஆப்பிள் வாட்ச்சினையும் ஆப்பிள் நிறுவனம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது. 

இதுவரை ஐபோன் 12, ஐபோன் 14 மாடல்களை மட்டும் விற்பவை செய்து வந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது இதன் அடுத்த மேம்படுத்தப்படுத்தப்பட்ட மாடலாக ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை தற்போது வெளியிட்டுள்ளது. 

ஐபோன் 15, 15 ப்ளஸ், 15 ப்ரோ, மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய மாடல் போன்களையும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஏர்பேட் ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக உள்ள, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஐபோன் பிரியர்களும் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.



டைட்டானியம் பாடி, கோல்டன் கலர் அல்லாத புதிய கலர்களில், 3 பேக் கேமிராக்கள், 48 எம்பி கேமிரா, யுஎஸ்பி சி போர்ட் சார்ஜ் வசதி ஆகியவை கொண்டதாக இந்த புதிய ஐபோன் மாடல்கள் உள்ளன. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகியன மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 15 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்தாகடும், 15 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாகவும் தயார் செய்யப்பட்டுள்ளது.    

ஐபோன் 15 மாடல்கள் முந்தைய ஐபோன் மாடல்களை விட 10 சதவீதம் வேகமாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்டதாக தயார் செய்யப்பட்டுள்ளன. யுஎஸ்பி டேட்டா பரிமாற்றமும் மூன்று மடங்கு அதிகம் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஐபோன் பிரியர்களுக்கு மற்றொரு குட் நியூசையும் வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆதாவது ஐபோன் 15 விலையில் எந்த மாற்றமும் கிடையாத என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 ஆரம்ப விலை 799 அமெரிக்க டாலர்கள் என்றும், ஐபோன் ப்ளஸ் ஆரம்ப விலை 899 டாலர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

news

ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்