சென்னை: தமிழகம் முழுவதும் ஏப்., 19ம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
ஏழு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் தற்போது அமலில் இருந்து வருவதால், பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடி விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள்,கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}