ரிலீஸானது அரண்மனை 4 .. "பேயுடன்" மோதும் சிவகார்த்திகேயனின் குரங்கு பெடல்.. ரசிகர்கள் ஹேப்பி!

May 03, 2024,11:22 AM IST

சென்னை: அரண்மனை 4 திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் அதற்கு இணையாக குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இரண்டு திரைப்படங்களும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களாக அமைந்துள்ளதால் இப்படங்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. 


இதேபோல சபரி, அக்கரன், நின்னு விளையாடு ஆகிய படங்களும் இன்று ரிலீஸ் ஆகின்றன.




சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. ஏற்கனவே வெளியான அரண்மனை 1, 2, 3, ஆகிய த்ரில்லரான கதைகளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. அந்த வரிசையில் இன்று அரண்மனை 4 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.


இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், குரங்கு பெடல் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. தெலுங்கு படமான நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான சபரி திரைப்படமும், தினேஷ் மாஸ்டர் நடிப்பில் நின்று விளையாடு திரைப்படமும், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள அக்கரன் திரைப்படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வெளியாகிறது.


அரண்மனை 4:




இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், இந்த வருடம்  மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் இன்று அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அப்போது இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியது.


குரங்கு பெடல்:




நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காமெடியனாக திரையில் தோன்றி பின்னர் ஒரு நாயகனாகவும், கவிஞராகவும், பாடகராகவும் படிப்படியாக தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தற்போது எஸ்.கே என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல  வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் படம் ரிலீசாக உள்ளது. 


இப்படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், சாய்கணேஷ், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன்

மற்றும் குழந்தைகளின் அசத்தலான நடிப்பில் குடும்ப பின்னணியில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. மேலும் 80 90களில் உள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதால் குழந்தைகளிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குரங்கு பெடல் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், அழகான படைப்பினை வெளியிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்