சென்னை : கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த வாரம் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இது 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தால் ரயில் பாதை மோசமாக சேதமடைந்தது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் விபத்து குறித்து தீவிர விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் 15 ரயில்வே ஊழியர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் வெளியான தகவல்களின் படி, தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
திருட்டுக் கும்பல்தான் காரணமா?
இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரயில்வே ஊழியர்களை தொடர்ந்து இன்னும் சிலரிடமும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னீக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இரும்பு திருடும் கும்பல்களால் ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது பகீர் கிளப்பி உள்ளது.
பல பகுதிகளில் தண்டவாளங்களையே திருடிச் சென்று விடுவார்கள். ரயில்வே இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு அருகே தண்டவாளங்கள், தண்டவாளக் கட்டைகள் உள்ளிட்டவை அப்படி அப்படியே போடப்பட்டிருக்கும். இதைத் திருடும் கும்பல்களும் உள்ளன. அப்படி ஏதாவது ஒரு கும்பல் செய்த வேலையா இது என்றும் சந்தேகப்படுகிறதாம் காவல்துறை. முழு விசாரணைக்குப் பிறகே தெளிவு கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}