அரிட்டாபட்டியில் நாளை பாராட்டு விழா.. உங்கள் அன்பை ஏற்க வருகிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Jan 25, 2025,02:34 PM IST

மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டைத் தொடர்ந்து அதற்கு முக்கியக் காரணமாக அமைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்த  போராட்ட குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை ஏற்று நாளை அரிட்டாபட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மதுரை மேலூர் அருகே உள்ள வள்ளாளபட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம், நாயக்கர் பட்டி, பெருமாள் மலை உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கிய 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இருப்பதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. மேலும் இந்த உரிமத்தை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் கடும் போராட்டம் நடத்தி வந்தனர். 


இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இருப்பினும் கூட மத்திய அரசு தொடர்ந்து அரிட்டாபட்டிக்கு அருகே உள்ள 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து மற்ற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தீர்மானித்தது.  இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவில் மேலூர் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த ஏழாம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தினர். மதுரைக்கு பல ஆயிரக்கணக்கில் விவசாயிகளும், கிராம மக்களும் திரண்டு அமைதிப் பேரணியாக வந்தது நாடு முழுவதும் பேசு பொருளானது. 




இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய உதவுவதாக கூறி விவசாயிகளுடன் கலந்து பேசினார். இது தொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் கனிமத்துறை மந்திரி கிஷன் ரெட்டியுடனும் போராட்டக் குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து திட்டம் கைவிடப்படும் என்ற நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.


அதன்படியே கடந்த 23ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மேலூர் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இனிப்பு வழங்கி உற்சாகமாக இதைக் கொண்டாடினர்.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொடர் எதிர்ப்பு மற்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்தே டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்பட்டதால், முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்தனர். நாளையே இந்த பாராட்டு விழா நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ள வருமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வருமாறு போராட்ட குழுவினர் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக போராட்டக் குழுவினர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர் பி.மூர்த்தி அழைத்து வந்தார்.




தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கிராம மக்கள் அவருக்கு தங்களது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறும் அழைப்பு விடுத்தனர். அதை முதல்வரும் ஏற்றுக் கொண்டார்.  நாளை குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் பின்னர் அரிட்டாபட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.


நாளை தான் அரிட்டாபட்டி செல்வது குறித்து எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார் முதல்வர். அதில், உங்கள் அன்பை ஏற்க நாளை நான் அரிட்டாபட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்