உள்ளூர் சண்டையில்  ராணுவ வீரர் கொலை.. அண்ணாமலை கடும் கோபம்.. காவல்துறை பதில்!

Feb 16, 2023,10:59 AM IST
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளூரில் ஏற்பட்ட ஒரு சண்டையில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட சிலர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.



போச்சம்பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் மற்றும் பிரபு. இருவரும் அண்ணன் தம்பிகள்.  இதில் பிரபு ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று, தங்களது ஊரில் உள்ள குடிநீர் வழங்கும் சின்டெக்ஸ் தொட்டி அருகே பிரபாகரன் குடும்பத்தைச் சேர்ந்த பிரியா துணி துவைத்துள்ளார்.

இதைப் பார்த்து அங்கு வந்த பேரூராட்சி திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, இது குடிநீர் தொட்டி. இங்கு ஏன் துணி துவைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனின் தாயாரும் அங்கு வந்து சின்னச்சாமியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.  அந்த வாக்குவாதம் அப்போதைக்கு முடிந்து அனைவரும் கலைந்து போயுள்ளனர்.

அன்று மாலை சின்னச்சாமி தனது மகன்கள் குணாநிதி, ராஜபாண்டியன் உள்ளிட்டோருடன் பிரபாகரன் வீட்டுக்கு வந்து வாக்குவாதம் புரிந்துள்ளார். அது திடீரென சண்டையாக மாறியது இரு தரப்பும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அதில் சின்னச்சாமி தரப்பு உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் பிரபாகரனைத் தாக்கியுள்ளது.  அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன், பிரியா ஆகியோரும் தாக்குதலுக்குள்ளானார்கள். இதில் பிரபு மிக மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் 3 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னச்சாமி, அவரது மகன்கள் ராஜ பாண்டியன், குருசூர்யமூர்த்தி, குணாநிதி மற்றும் வேடியப்பன், காளியப்பன், புலிபாண்டி, மணிகண்டன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது அனைவரையும் கைது செய்துள்ளனர். 

அண்ணாமலை கடும் கண்டனம்

இந்த கொலைச் சம்பவத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். 

ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை.  தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது.

சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று  இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென,  வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

காவல்துறை விளக்கம்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை டிவிட்டர் பக்கத்தில் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அதில், 08.02.2023 -ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி கிராம பொது தண்ணீர் தொட்டியில்  துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்திய ராணுவ வீரர் பிரபு என்பவர் உள்ளூர் நபர்களால் தாக்கப்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது தொடர்பாக  நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் - தமிழ்நாடு காவல்துறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்