திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

Jul 28, 2025,08:33 PM IST

கும்பகோணம்:  தஞ்சாவூர் மாவட்டம் சோழ மண்டல சாம்ராஜ்ஜியத்தின் மையப் புள்ளி. இந்த மாவட்டத்தில் இல்லாத கோவில்களே இல்லை.. கோவில்களின் மாவட்டம் என்றால் அது தஞ்சாவூர்தான்.. அப்படிப்பட்ட தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவில் மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது, பழமையானது.


கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம். இங்குள்ள மிகப் பிரபலமான பழமையான, திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம்தான் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்.


இங்குள்ள அம்பிகையின் பெயர் ஸ்ரீஞானாம்பிகை. ஸ்ரீபல்வளை நாயகி என்றும் அம்பாளை அழைப்பார்கள். இந்தக் கோவில் மிகவும் விசேஷமானது. இந்தக் கோவில் தல வரலாற்றில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன.




நமக்கெல்லாம் பிரச்சினை வந்தால் நாம் என்ன செய்வோம், யாரிடம் செல்வோம்.. ராகுவிடம் சென்று முறையிடுவோம், வழிபடுவோம் இல்லையா.. அப்படிப்பட்ட ராகுவுக்கே ஒரு பிரச்சினை வந்துள்ளது ஒரு சமயம். அந்த சமயத்தில் அவரிடம் சிவபெருமான், பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வழிபட்டு உன் குறையைச் சொல்.. அவள் தீர்த்து வைப்பாள் என்று கூறியுள்ளார். இதையடுத்து தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்த ராகு, அங்குள்ள துர்க்கை அம்மனை தரிசித்து குறை தீர்ந்து மகிழ்ந்தாராம்.


அதேபோல இன்னொரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது இந்தத் திருக்கோவிலில். ஒருமுறை சிவபெருமானை வழிபட திருஞான சம்பந்தர் இங்கு வந்துள்ளார். அவர் வந்தபோது சன்னதி நடை சாத்தியிருந்தது. சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்காக பாட ஆரம்பித்தார் திருஞான சம்பந்தர். அப்போது கதவு திறந்துள்ளது. ஆனால் சிவபெருமானை வழிபட முடியவில்லை. காரணம், எதிரே இருந்த நந்தி சிவபெருமானை மறைத்து நின்றிருந்தது.


இதைப் பார்த்த பட்டாச்சாரியார், நந்தியே சம்பந்தர் சிவபெருமானை காண வேண்டும். எனவே சற்று விலகி நில் என்று கூறினாராம். இதைக் கேட்ட நந்தி, சம்பந்தரின் பக்தியையும் அன்பையும் மெச்சி ஒரு அடி விலகி நின்றதாம். அதன் பின்னர் திருப்திகரமாக பெருமானை தரிசித்து விட்டு சென்றாராம் சம்பந்தர். இதனால்தான் இந்தக் கோவிலில் மட்டும் நந்தி சிலையானது சன்னதிக்கு எதிரே இல்லாமல், சற்று விலகியே இருக்கும். இது இந்தக் கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.


கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள துர்க்கைதான் இந்தக் கோவிலில் முக்கியம். ஆடி மாதம் முழுக்கவே இந்தக் கோவிலில் விசேஷமானது. ராகுவை, சிவன் வழிபட சொன்ன முதல் தெய்வம் துர்க்கை என்பதால் இந்தக் கோவில் துர்க்கைக்கு ராகு கால துர்க்கை என்றும் பெயர் உண்டு. 


இந்தக் கோவிலுக்கு மேலும் சில சிறப்புகளும் உண்டு. விஸ்வாமித்திர முனிவர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இந்தக் கோவிலில்தான். அதேபோல வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய இந்தக் கோவிலுக்கு வந்துதான் ராம பெருமான், தனது விலிலின் முனையால், கோடிதீர்த்தம் என்ற கிணற்றை உருவாக்கி அந்த நீரை எடுத்து, இறைவனை அபிஷேகம் செய்து தனது  தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம். அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம், ராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.


பட்டீஸ்வரம் பண்டைக் காலத்தில் மழபாடி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெயரை திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் காணலாம். சோழ மன்னர் தினசரி இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம். அப்படிப்பட்ட திருத்தலம்தான் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்.


குடந்தையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சுவாமி மலையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் பட்டீஸ்வரம் அமைந்துள்ளது. ஏராளமான பஸ் வசதியும் இந்த ஊருக்கு உண்டு.


செய்தி - புகைப்படம்: கும்பகோணம் ஜெயந்தி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!

news

நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!

news

ஐப்பசி மாத பெளர்ணமி.. சகல சிவாலய அன்னாபிஷேகம்.. சிவாலயங்களில் விசேஷம்!

news

30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்

news

கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு.. வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பின்னர் கூடும்.. தவெகவின் சிறப்புப் பொதுக்குழு.. என்ன பேசப் போகிறார் விஜய்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 05, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்