சென்னை: அருண் விஜய் நடித்த "மிஷன் சாப்டர் 1 :அச்சம் என்பது இல்லையே" திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படுவதாக லைக்கா ப்ரொடக்ஷன் அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ,தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ,கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த லால் சாலாம் போன்ற திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 :அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.
லால் சலாம் மற்றும் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே போன்ற இரு படங்களையும் லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொங்கலன்று மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடப்படுவதால், லால் சலாம் படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
அருண் விஜய் நடிக்கும் மிஷன் சாப்டர்1 : அச்சம் என்பது இல்லையே படத்தை இயக்குனர் விஜய் இயக்குகிறார். இப்படத்தை சுபாஸ்கரன் ,எம். ராஜசேகர் மற்றும் எஸ். சுவாதி இணைந்து தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய் ,எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹாசன் ,பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ் ,ஜேசன் ஷா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை எமி ஜாக்சன் இப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளார். விதம் விதமான கேரக்டர்களில் நடித்து, தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி பல பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன் ஒரு சிறந்த மலையாள நடிகை ஆவார். இவர் நடித்த கிரேட் இந்தியன் கிச்சன் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.. அதில் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. நயத்து, மாலிக் உள்ளிட்ட பல்வேறு மலையாளப் படங்களில் வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
தற்போது தமிழில் நிறைய நடிக்க ஆரம்பித்துள்ளார். சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகையாக இங்கும் காலூன்ற ஆரம்பித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .அதில் அதிரடியான ஆக்சன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிபூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். இதனால் இப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என மக்களிடையே ஆர்வமுடன் அதிகரித்து வருகிறது.
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
{{comments.comment}}