மதுரை: தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதாக மதுரையில் உள்ள பிரபல அரவிந்த் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மதுரையில் அமைந்துள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மிகவும் பிரபலமானது. இந்த மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக இங்குதான் அதிக அளவில் வருகின்றனர். இதனால் எப்போதுமே இந்த மருத்துவமனையில் காலை முதல் மாலை வரையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவமனையில் பல தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதால் இங்கு இலவச கண் சிகிச்சை முறைகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் நான்கு குழந்தைகளுக்கு கண் பார்வை பறிபோனதாக அரவிந்த் கண் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், தீபாவளி அன்று வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கை 104. அவர்களில் பத்துக்கு மேற்பட்டோர் கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் நான்கு பேருக்கு முற்றிலும் கண்பார்வை பாதிக்கப்பட்டு கண் எடுக்கப்பட்டது. அந்த நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடித்து தீபாவளி கொண்டாடி பார்வை இழப்பை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று வெடி விபத்தில் நான்கு குழந்தைகளின் பார்வை பறிபோனது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு தான் வருகிறது. இருந்தாலும் கூட பல்வேறு வகைகளிலும் வெடி விபத்து குறித்த விழிப்புணர்வு வழங்கியும் மீண்டும் மீண்டும் விபத்துக்கள் அரங்கேறிக் கொண்டுதான் வருகின்றன. அறியா குழந்தைகளுக்கு என்ன தெரியும். அவர்கள் வெடி வெடிக்கும் போது கூடவே இருந்து கவனமுடன் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஏனெனில் பார்வை மிகவும் அவசியம். அவர்களின் எதிர்கால கனவுகளையும் லட்சியங்களையும் அழித்துவிடாதீர்கள். கவனம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி
கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?
{{comments.comment}}