அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்., 15 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Apr 01, 2024,02:03 PM IST

சென்னை: டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை சிறையில்  அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி வந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து,  உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த விவகாரத்தில் தலையிட டெல்லி உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. 




இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுஜித் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று தடை உள்ளதா? என்று மனுதாரரிடம் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும். பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநரோ அல்லது குடியரசு தலைவரோ தான் முடிவு செய்ய வேண்டும். 


டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்  அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இன்று நடந்த விசாரணையில், கெஜ்ரிவாலிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கெஜ்ரிவாலை வைக்க உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்