பொங்கல் முதல்..  வெங்கடேஷ், ஆர்யாவின்... "சைந்தவ்"!

Oct 06, 2023,02:19 PM IST
சென்னை: வெங்கடேஷ் நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் சைந்தவ் படத்தில் நடிகர் ஆர்யாவும் இணைந்துள்ளார் .  பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்த அவன் இவன், நான் கடவுள், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றறது. அதனை தொடர்ந்து அவர் நடித்த அரண்மனை 3, எனிமி, காதர்பாட்சா போன்ற படங்கள் பெரிதாக போகவில்லை. 



கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகை சாய்ஷாவுடன் காதலில் விழுந்த ஆர்யா, 2019 ஆம் ஆண்டு பெற்றோர் சமமத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்யானா என்ற மகள் இருக்கிறாள்.

தற்போது சைந்தவ் என்ற படத்தில் மானஸ் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். நீண்ட தலைமுடி உடைய ஸ்டைலான தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் ஆர்யா உள்ள புகைப்படம் அண்மையில் வெளிவந்தது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நடிகர் வெங்கடேஷ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும், நடிகர் ஆர்யா ஸ்டைலான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பாலிவுட்டை சேர்ந்த பன்முகத் தன்மை கொண்ட நடிகரான நவாசுதீன் சித்திக், விகாஸ் மாலிக் கதாபாத்திரத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத் மனோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ருகானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியாவும் நடித்துள்ளனர்.

தெலுங்கில் பல  ஹிட் படங்களை கொடுத்த சைலேஷ் கொலானு சைந்தவ் படத்தை இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

நடிகர் வெங்கடேஷின் 75 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சைந்தவ் படம் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. நடிகர் வெங்கடேசுக்கு பொங்கல் வெளியீட்டில் வரும் படங்கள் எப்போதுமே நல்ல வரவேற்பை பெறும். அந்த வரிசையில் சைந்தவ் படம் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்