மீண்டும் ஆர்யமாலா.. இந்த முறை வேட்டையன் ரசிகர்கள் மூலமாக.. வித்தியாசமான முயற்சி!

Oct 10, 2024,03:36 PM IST

சென்னை:   வேட்டையன் பட ரசிகர்களிடம் ஆர்யமாலா படத்தை அறிமுகப்படுத்தும் போது இப்படத்தை ரசிகர்களிடம் அழகாக கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறேன் என இப்பட நாயகன் ஆர் எஸ் கார்த்தி கூறியுள்ளார்.


தெருக்கூத்து கலையை மையப்படுத்தி உருவாகியுள்ள ஆர்யமாலா படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. வடலூர் கே சுஜாதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவிஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ஆர்யமாலா.  இப்படத்தில் பீச்சாங்கை பட புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாகவும், குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷா ஜித் நாயகியாகவும் நடித்துள்ளனர்.




எண்பதுகளில் நடக்கும்  தெருக்கூத்து கலையை மையப்படுத்தி,அதனை ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாகவும் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாம்.


கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆர்யமாலா என்கிற டைட்டிலுக்கேற்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த முடித்துவிட்டு கம்பீரம் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விந்தை, பிழை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.




அதேபோல் பீச்சாங்கை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆர்.எஸ்.கார்த்திக் இந்தப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார். மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இந்தப்படத்தில் அத்திப்பூவப்போல என்கிற பாடலை பாடியுள்ளார்.இதுவே அவர் பாடிய கடைசியாக பாடலாகும்.


இந்த நிலையில் ஆர்யமாலா படம் வரும் அக்-18ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதில் நாயகனாக நடித்த ஆர் எஸ் கார்த்தி இப்படஅனுபவம் குறித்தும், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் வித்தியாசமான புரமோஷன் குறித்தும்  கூறியதாவது, இந்த படத்தில் காதல் என்பது வெறும் பேச்சாக இல்லாமல் கண்கள் பரிமாற்றத்திலேயே நடக்கும். அது தான் இந்த படத்தின் சிறப்பு.  காத்தவராயன் வேஷம் போடும் தெருக்கூத்து கலைஞனாக இதில் நடித்துள்ளேன். ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் இடைவேளைக்கு பிறகு தான் நான் என்ட்ரி ஆவேன். 




முதல் பாதி முழுவதும் கதாநாயகியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும் இடைவேளைக்கு பின் அவரது எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு ஆறுதலாக வடிகாலாக எனது கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு தெருக்கூத்து கலைஞராக  வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பிலேயே இருந்தது. அது மட்டுமல்ல சில வீதி நாடகங்கள் மூலமாக தெருக்கூத்தில் நடித்த அனுபவமும் இருந்தது. எனது கதாபாத்திரம் இடைவேளைக்கு பின் தான் வருகிறது என்றாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கதை வலுவாக இருந்ததாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன்.


படப்பிடிப்பு சமயத்தில் தான் படத்திற்காக பணியாற்ற வந்த தெருக்கூத்து கலைஞர்களிடம் அவர்களுடைய நடை உடை பாவனைகள் குறித்து கொஞ்சம் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதுமட்டுமல்ல இந்த படத்தில் கூத்து கலைஞராக மறைந்த சிவசங்கர் மாஸ்டரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கிராமங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியபோது குறிப்பாக இந்த ஆர்யமாலா நாடகத்தை நாங்கள் நிஜமாகவே நடத்துகிறோம் என்பதாகவே உணர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவருமே பார்வையாளர்களாக வந்து அமர்ந்து தினசரி எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியம் தருவதாகவும் இருந்தது.




அக்டோபர் 18ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் இதன் புரமோஷனின் ஒரு பகுதியாக, அக்டோபர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு நான் நடித்துள்ள அதே கூத்துக் கலைஞன் கெட்டப்பிலேயே சென்று இந்த படத்தை பற்றி மக்களுக்கு விளம்பரப்படுத்த முடிவு செய்து இருக்கிறேன். குறிப்பாக அந்த சமயத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்பதால் அந்த படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக கூடும் ரசிகர்களிடம் எங்களது ‘ஆர்யமாலா’ படத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த படம் குறித்து ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறேன் என  கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

தோல்வியிலிருந்துதான் நிறைய கற்கிறோம்.. We learn little from victory, much from defeat

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

news

மோட்சத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

news

2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்

news

பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்